search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியல் பணம் கொள்ளை"

    நாங்குநேரியில் நேற்று நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    களக்காடு:

    நாங்குநேரி பைபாஸ் ரோட்டில் குத்துப்பிறை இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு பூஜைகள் அனைத்தும் முடிந்ததும் பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.  

    அவர் இன்று காலை மீண்டும் கோவிலுக்குவந்தார். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கோவில் கதவும் உடைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

    நாங்குநேரி பைபாஸ் சாலையில் இந்த கோவில் இருப்பதால், கோவிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்கள் மட்டுமின்றி அந்த வழியாக செல்பவர்களும் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள். இதனால் உண்டியலில் அதிக பணம் இருந்திருக்கும் என கூறப்படுகிறது. 

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோகனூர் அருகே 2 கோவில்களில் புகுந்த மர்ம ஆசாமிகள் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
    மோகனூர்:

    மோகனூர் அருகே 2 கோவில்களில் புகுந்த மர்ம ஆசாமிகள் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    மோகனூர் அருகே உள்ள வளையபட்டி என்ற ஊரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகிலேயே விநாயகர் கோவிலும் உள்ளது. இந்த கோவில்களில் தினசரி பூஜை நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 2 கோவில்களின் உண்டியல்களும் உடைக்கப்பட்டு இருந்தன. இது குறித்து மோகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் இரவு கோவில்களுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்று இருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதால் அதில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும், தங்க, வெள்ளி நாணயங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது என அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கண்காணிப்பு கேமரா இல்லாததால் கோவில்களில் புகுந்த மர்ம ஆசாமிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.
    பாப்பாரப்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த நகை மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பென்னாகரம் செல்லும் மெயின் ரோட்டில் தொட்லாம்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக ராமன் உள்ளார். 

    இந்த நிலையில், நேற்று காலை 5 மணிக்கு வழக்கம்போல் கோவிலில் திறப்பதற்காக ராமன் வந்தார். அப்போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும், அம்மன் கழுத்தில் இருந்த, கால் பவுன் தங்க தாலியையும் கொள்ளை அடிக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து பூசாரி ராமன், பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லித்தோப்பில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு வேல் முருகன் நகர் 2-வது குறுக்கு தெருவில் சாலை முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து உண்டியல் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.

    நேற்று சங்கடகர சதுர்த்தியையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனத்துக்கு பின்னர் கோவில் அர்ச்சகர் ராஜி இரவு 10 மணிக்கு கோவிலை பூட்டி சென்றார். இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் பூஜை செய்ய அர்ச்சகர் ராஜி கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கோவிலின் 2 கதவு பூட்டுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. காணிக்கை பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கடந்த 6 மாதமாக உண்டியல் திறக்கப்படவில்லை. எனவே, உண்டியலில் சுமார் ரூ.60 ஆயிரம் வரை காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறனும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அருகில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து உண்டியல் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பத்தூர் அருகே முருகர் கோவிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி அருகே வெற்றிவேல் முருகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புகுந்த மர்ம நபர்கள், 2 உண்டியல்களை உடைத்து அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து கோவில் அறங்காவலர் நாகராஜ், குரிசிலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    அரியாங்குப்பத்தில் அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அரியாங்குப்பம்:

    அரியாங்குப்பத்தில் பூரணாங்குப்பம் வீதியில் செடிலாடும் செங்கழு நீரம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியில் திரவுபதி அம்மன் கோவிலும், அந்த கோவில் வளாகத்தில் பார்த்தசாரதி கோவிலும் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில்களில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரமோற்சவ விழா நடந்தது.

    விழா முடிந்ததும் இந்த கோவில்களில் உண்டியல் காணிக்கை பணம் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த 3 கோவில்களிலும் இருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    மேலும் கோவில்களில் இருந்த பீரோக்களை உடைத்து அதில் வைத்திருந்த பூஜை பொருட்களையும் அவர்கள் திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவில் அறங் காவலர் குழுவினர் அரியாங்குப்பம்போலீசில் புகார் செய்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

    அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிப்பு சம்பவம் அப்பகுதி மக்களையும், பக்தர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    இதற்கிடையே கோவில்களில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் அந்த பகுதியில் இருந்த மின்துறை அலுவலகத்துக்குள்ளும் புகுந்தது. அங்கு மின்கட்டண வசூல் பணத்தை வைத்திருக்கும் பணப் பெட்டியை உடைத்துள்ளனர். ஆனால், அதில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்று விட்டனர்.

    ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கோவில்களிலும் உண்டியல் கொள்ளை நடந்திருப்பது முதலியார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை, முருங்கப்பாக்கத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம்.

    மாதந்தோறும் அமாவாசையின் போது, இந்த கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருவார்கள். அவர்கள் உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவார்கள். ஒவ்வொரு அமாவாசையின் பிறகு உண்டியலை திறந்து பணத்தை எண்ணுவது வழக்கம்.

    கடந்த அமாவாசையின் போது பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து பூசாரி கோவில் கதவை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை அவர் வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது அங்கிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அறங்காவல் குழு தலைவர் பாஸ்கரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.

    இதுகுறித்து முதலியார் பேட்டை போலீசில் அவர் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் அவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது மேலும் 2 கோவில்களில் கொள்ளை நடந்து இருப்பது தெரிய வந்தது. முருங்கப்பாக்கம் என்.ஆர்.நகர் பகுதியில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலும், முருங்கப்பாக்கம்பேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மன் கோவிலிலும் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருந்தது.

    3 கோவில்களிலும் கொள்ளை யடித்தவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    மேலும் முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவில் பகுதியில் உள்ள மளிகை கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி. கேமராவில் பதிவாகி இருந்த பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
    ×